ஐ.சி.சி. ஜூலை மாத சிறந்த வீராங்கனை விருதுக்கு ஹர்ஷிதா சமரவிக்கிரம

ஜூலை மாதத்துக்கான ஐ.சி.சியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்கள் பட்டியலில் இலங்கை அணியின் ஹர்ஷிதா சமரவிக்கிரம இடம்பெற்றுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் சிறப்பாகச் செயல்படும் வீரர், வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவு செய்து விருது வழங்கி கௌரவித்து வருகின்றது.

இதன்படி, ஜூலை மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்காக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீராங்கனை ஹேலி மேத்யூஸ், இலங்கை அணியின் ஹர்ஷிதா சமரவிக்கிரம மற்றும் இங்கிலாந்து அணியின் சகலதுறை வீராங்கனை நாட் ஷிவர் பிரண்ட் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றுவதற்கு ஹர்ஷிதா சமரவிக்கிரம முக்கிய பங்காற்றினார். அந்தத் தொடரில் அவர் 173 ஓட்டங்களைப் பெற்றதுடன், இரண்டாவது போட்டியில் சதம் விளாசினார்.

இதேவேளை, அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹேலி மேத்யூஸ் 265 ஓட்டங்களையும் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்ட நாட் ஷிவர் பிரண்ட், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் 75 ஓட்டங்களையும், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 58 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

இம்மூவரில் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதை வெல்லப்போவது யார் என்பது விரைவில் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பெற்றோல், விமான எரிபொருள் மற்றும் டீசல் கொள்முதலுக்கு அமைச்சரவை ஒப்புதல்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பெற்றோல் 92 Unl, விமான வகை டீசல் எண்ணெய் மற்றும் டீசல் (0.05% M.S) ஆகியவற்றை நீண்டகால ஒப்பந்தங்களின்...

சாகர காரியவசம் பிணையில் விடுவிப்பு

இன்று காலை கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.