கொழும்பு மாநகர முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்கவின் மகனும், கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற வேட்பாளருமான கனிஷ்க சேனாநாயக்க தனது 41ஆவது வயதில் காலமானார்.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனிஷ்க சேனாநாயக்க 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார்.


