நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

இலங்கையின் மேல், வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும், மன்னார் மாவட்டத்துக்கும் கடுமையான மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இன்று (3) முற்பகல் 11.30 க்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பிடப்பட்ட மாகாணங்கள் மற்றும் மாவட்டத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதோடு, கடுமையான மின்னல் தாக்கமும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்கள் மற்றும் சேதங்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ரோசி சேனாநாயக்கவின் மகனும், பாராளுமன்ற வேட்பாளருமான கனிஷ்க சேனாநாயக்க 41 ஆவது...

கொழும்பு மாநகர முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்கவின் மகனும், கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற வேட்பாளருமான கனிஷ்க சேனாநாயக்க தனது 41ஆவது வயதில்...

அமெரிக்க தடை எச்சரிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விளக்கம்!

இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் சிக்கியுள்ள ஈரானியக் கப்பல்களுக்குச் சேவைகளை வழங்கினால், இலங்கைக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்படலாம் என வெளியாகும் தகவல்கள் குறித்து...