நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் மீண்டும் உயர்வு!

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 

இது கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 0.2 சதவீதம் அதிகரிப்பாகும் என்பதுடன், இவ்வருடத்தின் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் 0.3 சதவீதம் அதிகரிப்பாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டில் நாட்டில் வேலைவாய்ப்பின்றி உள்ள நபர்களின் எண்ணிக்கை 340,240 என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

அவர்களில் 6.1 சதவீதம் பேர் பெண்கள் என்றும் 2.8 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

15 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிவினரிலேயே அதிக வேலைவாய்ப்பின்மை விகிதம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே, இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டில் நாட்டின் தொழிலாளர் படையும் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

 

இது கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 49.3 சதவீதமாகப் பதிவாகியிருந்ததுடன், இவ்வருடத்தின் முதலாவது காலாண்டில் 49.2 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஞானசார தேரர் நாளை வரை விளக்கமறியலில்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை நாளை (5) வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமா?

ஒக்டோபர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.   இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு...