Date:

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி

தனி விமானத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி. இதற்காக மத்திய அரசின் அனுமதியை அவர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்ட ரஜினிக்கு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அமெரிக்காவில் வைத்து இரண்டாவது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் அமெரிக்கா சென்று தனது உடல்நிலையை பரிசோதித்து வருகிறார் ரஜினிகாந்த்.

அண்ணாத்த படப்பிடிப்பை முடித்த கையோடு அவர் அமெரிக்கா செல்வதாக இருந்தது. கொரோனா தொற்றால் படப்படிப்பு பாதிக்கப்பட்டது, இந்தியர்கள் அமெரிக்கா செல்ல அவ்வரசு தடை விதித்தது என பல காரணங்களால் ரஜினியின் அமெரிக்கப் பயணம் தள்ளிப் போனது. தற்போது அண்ணாத்த படத்தில் தான் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் ரஜினி முடித்துள்ளார். விரைவில் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்.

இதற்காக அவர் தனி விமானத்தை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது. அவருடன் அவரது குடும்பத்தாரும் செல்லவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. வெளிநாட்டிற்கு தனி விமானத்தில் செல்ல, மத்திய அரசின் அனுமதி தேவை. ரஜினிக்கு அவ்வனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா நடித்திருக்கும் அண்ணாத்த படத்தை சிவா இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 படம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

எரிபொருளினைப் பெறுவதற்கு மீண்டும் நீண்ட வரிசை (Pics)

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை முதல் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட...

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்தவகையில், இன்றைய தினம்...

வேகமாக பரவும் அடினோ வைரஸ் என சந்தேகிக்கப்படும் மர்மமான வைரஸ்

சிறுவர்களிடையே தற்போது வேகமாக பரவக் கூடிய மர்மமான வைரஸ் ஒன்று அதிகமாக...

யாழ், கிழக்கு பல்கலைக்கழங்களின் சித்த மருத்துவ பிரிவுகளை, பீடங்களாக தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி

யாழ், கிழக்கு பல்கலைக்கழங்களின் சித்த மருத்துவ பிரிவுகளை தரமுயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த...