தமிழகத்தில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மேலும் ஒருவார காலத்திற்கு நீடிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
தமிழக சுகாதார அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10) சென்னை தலைமைச் செயலகத்தில் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் பொது முடக்க தளர்வுகள் மற்றும் ஊரடங்கு நீடிப்பு குறித்த இறுதி முடிவை நாளை (11) முதலமைச்சர் அறிவிப்பார் என எதிர்ப்பர்க்கப்படுகின்றது.
தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமுலில் உள்ளது.
இந்த பொது முடக்கம் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில் நாளை அது நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.