இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லிம்சனுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
இதனால் நியூசிலாந்து அணிக்கு டொம் லெத்தம் அணித் தலைவராக செயற்படுகின்றார்.
தோள் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாகவே வில்லிம்சன் இந்த போட்டியிலிருந்து விலகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக காயம் காரணமாக பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரையும், ஐபிஎல் தொடரையும் வில்லிம்சன் இழந்தார்.
இந்த நிலையில் எச்பெஸ்டனில் ஆரம்பமாகியுள்ள இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது.