Date:

சந்தேக நபர்  உயிரிழப்பு: பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரின் வாகனத்திலிருந்து வெளியில் பாய்ந்த சந்தேக நபர்  உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை பகுதியில் இந்த சம்பவம் நேற்று (06) இடம்பெற்ற நிலையில், சம்பவம் தொடர்பில் இருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபரை கைது செய்த உப பொலிஸ் அதிகாரியும் பொலிஸ் பரிசோதகரும் இவ்வாறு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று(07) தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாட்டினை மீறிய குற்றச்சாட்டில் 48 வயதான குறித்த சந்தேக நபர் நேற்று (06) கைது செய்யப்பட்டு பொலிஸாரின் வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளார்.

இதன்போது, குறித்த நபர் பொலிஸாரின் வாகனத்தில் இருந்து வெளியே பாய்ந்தபோது கடும் காயங்களுக்குள்ளான நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் நேற்று மாலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அஞ்சல் கட்டணங்கள் அதிரடியாக அதிகரிப்பு

உள்நாட்டு தபால் கட்டணங்கள் திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா...

25 தொன் ஈச்சம் பழங்களை வழங்கியது குவைத்

எதிர்வரும் வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ள புனித நோன்பு ரமலான் மாதத்தை முன்னிட்டு...

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...