Date:

வைத்தியசாலையில் இருந்து வௌியேறினார் முஜிபுர் ரஹ்மான்

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த ​கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தற்போது சுகம்பெற்று வைத்தியசாலையில் இருந்து வௌியேறி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நான் தற்போது சுகம்பெற்று வைத்தியசாலையில் இருந்து வௌியேறி வீட்டில் தனமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.  என அவரின் உத்தியோகபூர்வ இன்றைய தினம் (6) தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.
அவரின் முகப்புத்தக்கத்தில் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“அல்ஹம்துலில்லாஹ்.. அல்லாஹ்வின் அருளால் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நான் தற்போது சுகம்பெற்று வைத்தியசாலையில் இருந்து வௌியேறி வீட்டில் தனமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வில் இருக்குமாறு வைத்தியர்கள் பரிந்துரை செய்துள்ளனர். நான் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நாட்களில் என்னுடைய சுகத்திற்காக பிரார்த்தனை செய்து, நலம் விசாரித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இந்நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
குறிப்பாக நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமாகிய சஜித் பிரேமதாஸ அவர்கள், தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களில் அடிக்கடி என்னுடன் தொடர்புகொண்டு நலம் விசாரித்துக் கொண்டே இருந்தார். அதேபோல் தன்னுடைய நலம் விசாரித்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தநேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்துடன், இந்த நேரத்தில் வைத்தியர் உபுல் திசாநாயக்க அவர்களையும், அவரது பணிக்குழாமையும் நன்றியோடு ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நாட்களிலும் சரி தற்போதும் சரி எனக்கு தேவையான அனைத்து உதவிகளையும், சிகிச்சைகளையும் மிகுந்த அக்கறையுடன் வழங்கினார்.
முக்கியமாக என்னொடு நெருங்கிப் பழகக்கூடிய பலரும், ஏனைய நலன் விரும்பிகள் உட்பட, நான் விரைவில் சுகம் பெற வேண்டி பிராரத்தனை செய்து, அடிக்கடி என்னை தொடர்பு கொண்டு சுகம் விசாரித்த அனைவருக்கும் இந்நேரத்தில் நான் மகத்தான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிம் அட்டை மீள் பதிவு: அமைச்சரவை அனுமதி!

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர்...

பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி

இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக,...

நெதர்லாந்து அணி அபார வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் நமீபியா...

இந்தியா பாகிஸ்தான் போட்டி தொடர்பில் புதிய தகவல்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியா...