Date:

மாவனெல்லயில் மண்ணுக்குள் புதையுண்ட  தனது எஜமான்களை காட்டிக்கொடுத்த நாய்

மாவனெல்ல தெவனகல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண் திட்டு சரிந்து விழுந்ததில், நால்வர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர்.

கடந்த சில நாள்களாக பெய்த அடைமழையின் காரணமாகவே இந்த மண்திட்டு சரிந்து வீட்டின் மீது விழுந்துள்ளது.

மண்ணுக்குள் தந்தை, தாய், மகன், மற்றுமொருவர் புதையுண்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தது.

அதனை தொடந்து மண்ணுக்குள் புதையுண்டிருப்பவர்களே தேடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை சம்பவம் நடந்த வீட்டில் இருந்த நாய் நிலச்சரிவு காரணமாக மண்ணால் மூடப்பட்ட இடத்திற்கு வந்துள்ளது, ஆனால் அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டியடித்தனர்.

இருப்பினும் நாய் தனது வீட்டிற்குத் திரும்பி அதன் முன் கால்களிலிருந்து மண்ணை அகற்றத் தொடங்கியபோது மீட்புப் பணியாளர்கள் கவனித்தனர்.

பின்னர் மீட்பு பணியாளர்கள் நாய் தனது கால்களினால் அகற்றிய இடத்தை தொண்டிய போது அங்கு
அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, நிலச்சரிவில் இறந்த ஒரே குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

புகைப்படம் – பிரதீப் குமார தர்மரத்ண

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானின் IRIS Bushehr கப்பலை திருகோணமலைக்கு அனுப்ப நடவடிக்கை

ஈரானுக்குச் சொந்தமான 'IRIS Bushehr' கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு...

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் – இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம்...

Breaking நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை

புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா மின் விநியோகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு...