Date:

19 பேரின் உயிரைப் பறித்த சட்டவிரோத தங்கச் சுரங்கம்!

இந்தோனேசியாவின் வடக்கு பப்புவாவில் உள்ள சட்டவிரோத தங்கச் சுரங்கமொன்று இடிந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்துள்ளதோடு 20 இற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், வடக்கு பப்புவாவில் நேற்று முன்தினம் கடும் மழை பெய்தது. இதன் விளைவாக தாழ்நிலங்களில் வௌ்ள நிலை ஏற்பட்டது.

இதனால் அங்கிருந்த சட்ட விரோத தங்கச் சுரங்கத்திற்குள்ளும் வௌ்ள நீர் புகுந்தது. அச்சயம் தொழிலாளர்கள் பலர் தங்கம் வெட்டி எடுத்துக் கொண்டிருந்தனர். அந்த வேளையில் குறித்த சுரங்கம் பாரிய சத்தத்துடன் திடீரென இடிந்து விழுந்ததது.

இதனையறிந்ததும் ஸ்தலத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். எனினும் சுரங்க இடிபாடுகளில் சிக்குண்ட 19 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 20 இற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

ஆசிய நாடுகளிலேயே தங்க உற்பத்தியில் முன்னணி நாடாக விளங்கும் இந்தோனேசியா கடந்தாண்டில் மாத்திரம் சுமார் 100 தொன் தங்கத்தை ஏற்றுமதி செய்துள்ளது.

வடக்கு சுலேவேசியில் உள்ள டோகா திண்டுங் தங்க சுரங்கமே இந்தோனேசியாவில் காணப்படும் மிகப்பெரிய தங்க சுரங்கங்களில் ஒன்றாகும்.

கிழக்கு ஜாவாவில் உள்ள சும்பெராகுங் தங்க சுரங்கம், தும்பாங் தங்க சுரங்கம் என அரசு சார்பிலும் தனியார் நிறுவனங்களும் தங்க சுரங்கங்களை தோண்டி தங்கத்தை வெட்டி எடுத்து வருவது தெரிந்ததே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானின் 200 இலக்குகளை 24 மணி நேரத்தில் தாக்கிய இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200 இற்கும் மேற்பட்ட...

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...