Date:

திசைமாறிய கப்பல் கழிவுகள்

தீப்பற்றியெறிந்த “எம்.வீ. எக்ஸ் பிரஸ் பேர்ல்” எனும் கப்பலிலிருந்து கடலுக்குள்
விழுந்துள்ள இரசாயனம் உள்ளிட்டப் பொருள்கள் கொழும்பு கடற்பரப்பின்
வடக்கு பக்கமாகவே கரையொதுங்கின எனத் தெரிவித்த நாரா அமைப்பின்
சிரேஷ்ட ஆய்வாளர் பேராசிரியர் தீப்த அமரதுங்க. எனினும், அவ்வாறான
பொருள்கள் யாவும் தெற்கு பக்கமாகவே கரையொதுங்கி வருகின்றன என்றார்.

பாணந்துறை வரையிலான கடற்கரையோரங்களில், ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டிருந்தன. தற்போது காலி கடற்கரை​யோரங்கள் வரை
ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்த அவர், முன்னேற்பாடு
நடவடிக்கையாக, பாணந்துறையிலிருந்து நீர்கொழும்பு வரையிலான
கடற்பிரதேசங்களில், கடற்றொழில்களில் ஈடுபடுவதற்கு முற்றிலும் தடை
விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

எனினும் தற்போது மீன் சந்தைகளில் காணப்படும் மீன்கள், மேற்குறித்தப்
பிரதேசங்களில் இருந்துப் பிடிக்கப்பட்டவைகள் அல்ல என்பதை உறுதியாகக் கூற
மு​டியுமெனவும், மீன் சந்தைகளிலிருக்கும் மீன்கள், வடக்கு, கிழக்கு கடற்
பிரதேசங்களில் பிடிக்கப்பட்டவையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான...

நீர் வெட்டு அமுல் தொடர்பில் வௌியான தகவல்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று...