Date:

கைதை தடுக்க கோரி தேசபந்து ரிட் மனு தாக்கல்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

 

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம டபிள்யூ 15வது ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக தன்னைக் கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு அந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.

 

இந்த மனு இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் நீதியரசர் மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

 

 

இதன்போது பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுத்த பின்னர், மனுவை எதிர்வரும் 12 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்க நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிம் அட்டை மீள் பதிவு: அமைச்சரவை அனுமதி!

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர்...

பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி

இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக,...

நெதர்லாந்து அணி அபார வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் நமீபியா...

இந்தியா பாகிஸ்தான் போட்டி தொடர்பில் புதிய தகவல்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியா...