Date:

பண்டிகைக் காலங்களில் சோதனை நடவடிக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

கடந்த 10 நாட்களில் நாடளாவிய ரீதியில் 578 அரிசி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சில இடங்களில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்த முறைப்பாடுகளின் பிரகாரம், மாவட்ட மட்டத்திலான அதிகாரிகளினால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதன் பதில் பணிப்பாளர் நாயகம் திலகரட்ன பண்டா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும், அந்த குறைபாட்டிற்கான நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், சந்தையில் அரிசி கிடைப்பது படிப்படியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பண்டிகைக் காலங்களில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் தொடர்பிலும் சோதனைகள் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரதமர் கொழும்பு தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டில்!

கொழும்பு மாவட்டத்தினுள் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதியளிப்பதற்கோ அல்லது அபிவிருத்தியின் பெயரால் மக்களை...

பலத்த மின்னல் தாக்கலாம்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த...

நுவரெலியாவிலிருந்து கொழும்பு சென்ற மரக்கறி மலை!

கொழும்பில் ஏற்பட்ட பெரும் தேவையைத் தொடர்ந்து, நேற்று நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து...

பயணத்தை இலகுவாக்கப் புதுப்பிக்கப்பட்ட Google Map!!

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google Map A மற்றும்...