Date:

இரண்டாமிடத்துக்கு முன்னேறிய மெஹிடி ஹஸன்

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு, பங்களாதேஷின் சுழற்பந்துவீச்சாளர் மெஹிடி ஹஸன் மிராஸ் முன்னேறியுள்ளார்.

இலங்கைக்கெதிரான முதலிரண்டு போட்டிகளிலும் ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே, ஐந்தாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தை மெஹிடி அடைந்துள்ளார்.

இதேவேளை, குறித்த போட்டிகள் இரண்டிலும் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பங்களாதேஷின் வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மான், 17ஆம் இடத்திலிருந்து எட்டு இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ட்ரெண்ட் போல்ட், 2. மெஹிடி ஹஸன் மிராஸ், 3. முஜீப் உர் ரஹ்மான், 4. மற் ஹென்றி, 5. ஜஸ்பிரிட் பும்ரா, 6. ககிஸோ றபாடா, 7. கிறிஸ் வோக்ஸ், 8. ஜொஷ் ஹேசில்வூட், 9. முஸ்தபிசூர் ரஹ்மான், 10. பற் கமின்ஸ்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பாபர் அஸாம், 2. விராட் கோலி, 3. ரோஹித் ஷர்மா, 4. றொஸ் டெய்லர், 5. ஆரோன் பின்ஞ், 6. ஜொனி பெயார்ஸ்டோ, 7. பக்கர் ஸமன், பொஸ்வா டு பிளிஸிஸ், 9. டேவிட் வோணர், ஷே ஹோப்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஷகிப் அல் ஹஸன், 2. பென் ஸ்டோக்ஸ், 3. மொஹமட் நபி, 4. கிறிஸ் வோக்ஸ், 5. ரஷீட் கான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அனுரவுக்கு தடையுத்தரவு

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட...

எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும்

எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும் என இராஜாங்க அமைச்சர்...

குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம்

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இருவர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டமை அடையாளம் காணப்பட்டதாக...

இரும்பின் விலை குறைவடைந்துள்ளது

சந்தையில் இரும்பின் விலை சுமார் 50 வீதத்தால் குறைவடைந்துள்ளது. ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையினால்...