Date:

சம்பள பேச்சு வார்த்தையை புறக்கணித்த முதலாளிமார் சம்மேளனம்

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பிலான கலந்துரையாடல் இன்று தொழில் அமைச்சில் இடம்பெற்ற நிலையில் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள் பிரசன்னமாகவில்லையெனக் கூறப்படுகிறது.

 

 

இந்த கலந்துரையாடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ், தொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிந்த போதிலும், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள் பிரசன்னமாகவில்லை.

 

 

முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள் இன்றைய கலந்துரையாடலுக்கு பிரசன்னமாகாமை தொடர்பில், நீதிமன்றத்திற்கு விடயங்கள் தெளிவூட்டப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்..

 

 

 

தொழிலாளர்களின் சம்பளத்தை அரசாங்கம் நிர்ணயித்து வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளமையினால், அதனை நிறுவனங்களுக்கு மீற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

 

 

 

நிறுவனங்கள் வர்த்தமானி அறிவித்தலை மீறி செயற்படுகின்றமை மற்றும் கலந்துரையாடலுக்கு பிரசன்னமாகாமை குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என அவர் தெரிவிக்கின்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முஸ்லிம் தாதியர் ஆடை விவகாரம்

முஸ்லிம் சிவில் அமைப்பினருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல்...

ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம்

பஹ்ரைனில் நடைபெற்ற 3 ஆவது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில், இலங்கையின்...

பாதாள அரசியல்வாதிகள் யார்? விரைவில்…

பாதாளக் குழுக்களுடன் தொடர்பில் உள்ள  மற்றும்  தொடர்பு கொண்டிருந்த அரசியல்வாதிகளின் பெயர்...

பாடசாலை நேரம் நீடிக்கப்படுவதற்கு ஆசிரியர்-அதிபர்கள் எதிர்ப்பு!

2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை...