Date:

புதுக்கடையில் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்து ரொட்டியை அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்ற நபர் கைது !

கொழும்பு – புதுக்கடை பகுதியில் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்து ரொட்டியை அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வாழைத்தோட்டம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த உணவகத்தில்,  உணவைப் பெற்றுக் கொள்ளச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் கொத்து ரொட்டியின் விலையைக் கேட்டபோது, அந்த உணவகத்தைச் சேர்ந்தவர் 1,900 ரூபாய் என அறிவித்துள்ளார்.

விலையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வெளிநாட்டவர் வெளிப்படையாகவே தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த நிலையில்,  உணவு விற்பனை நிலையத்தைச் சேர்ந்தவர் சுற்றுலாப் பயணியை மிரட்டும் தொனியில் எச்சரித்துள்ளார்.

இவை, அனைத்தும் குறித்த சுற்றுலாப் பயணியால் காணொளியாக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில்,  நேற்றையதினம்  உணவகத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஒரு கிலோ இஞ்சி 3,000 ரூபாய்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை வீழ்ச்சியடைந்த...

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு நோட்டீஸ்

முன்னாள் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஏ. எச். எம். பௌசிக்கு எதிராக...

தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர்...

பாட்டளிக்கு சிஐடி அழைப்பு

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க...