Date:

மதுபோதையில் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சர்

இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது நண்பர்களுடன்மதுபோதையில் , வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைந்து சிறை மற்றும் தூக்கு மேடைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இச்சம்பவத்தின் போது இராஜாங்க அமைச்சர் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாகவும், நடக்க முடியாத நிலையில் இருந்த அவரது நண்பர்கள் சிலரை சிறைக்குள் செல்ல அனுமதி மறுத்த சிறை அதிகாரிகளை அவர்கள் தவறாக பேசியதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிரேஷ்ட சிறை அதிகாரியொருவர் இச்சம்பவம் நடந்ததை உறுதிசெய்தாலும், மேலதிக தகவல்களை வெளியிட முடியாது என்றும் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை முகாமையாளர் மற்றும் சிறை மறுவாழ்வு அமைச்சின் செய்தித் தொடர்பாளரை தொடர்பு கொண்டபோது, ​​ இராஜாங்க அமைச்சர் லோஹன் ரத்வத்தே சம்பந்தப்பட்டதில் எந்த உண்மையும் இல்லை என்றும் சம்பவத்தின் போது அங்கு அவர் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!

இம்முறை ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின்...

பயாகலை ரயில் விபத்து: படுகாயமடைந்த இரு இளைஞர்கள் பலி!

இன்று (22) காலை காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற 'காலி குமாரி'...

இலங்கையில் ஐயப்ப வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு: கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற ‘பாட்டு பாடவா’ பக்திப் பாடல் போட்டி

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இலங்கையில் ஐயப்ப வழிபாடு...

மழை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பல்லேகலயில் குவியும் ரசிகர்கள்!

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8...