ஏழாவது ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் 15 பேர் அடங்கிய குழாம் சற்று முன்னர் இலங்கை கிரிக்கெட் சபையினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தசுன் சானக்க தலைமையிலான இலங்கை அணியின் குழாமில் 15 வீரர்களுடன் மேலதிக வீரர்களாக 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.