Date:

ஜி-20 சர்வமத மாநாட்டில் பிரதமர் மஹிந்த நாளை தலைமை உரை

இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர், நேற்றுப் பிற்பகல்  அந்நாட்டின் போலோக்னா குக்லியெல்மோ மார்கோனி விமான நிலையத்தை சென்றடைந்தனர்.

பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை, இத்தாலியின் அரச அதிகாரிகள் மற்றும் இத்தாலிக்கான இலங்கை தூதுவர் அலுவலகத்தின் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜி-20 சர்வமத மாநாடு 2021 நாளை(12) போலோக்னா நகரில் ஆரம்பமாகவுள்ளது.

மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் தலைமை உரையாற்றுமாறு கிடைத்த அழைப்பொன்றிற்கு அமைய பிரதமர் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளார்.

‘கலாசாரங்களுக்கிடையே சமாதானம், மதங்களுக்கிடையே புரிதல்’ எனும் தொனிப்பொருளில் இம்மாநாடு இடம்பெறவுள்ளது.

இந்த விஜயத்தின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இராஜதந்திர சந்திப்புகளிலும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

May be an image of 2 people and people standing\
May be an image of 2 people, people standing, outdoors and text that says "FICIAL PREMIER PARTNI N"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையில் பயங்கரம் – வாடகை வீட்டில் தங்கியிருந்த 71 வயதான நபர் வெட்டிக்கொலை !

  எம்பிலிபிட்டிய - மடுவன்வெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நபரொருவர்...

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட 726 பேர் கைது !

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களும் 10...

போர் பதற்றத்திலும் இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி – குவிக்கப்படும் இராணுவத்தினர் !

ஈரான் - இஸ்ரேலுக்கு இடையில் எந்த நேரத்திலும் மோதல் நிலைமை ஏற்படலாம்...

இலங்கையில் ஒன்றிணையும் Dialog – Airtel ! ஒப்பந்தம் கைச்சாத்து !

டயலொக் அக்ஸியாட்டா (Dialog Axiata) மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் (Bharti...