Date:

யுனைடெட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடேஸ் (பிரைவேட்) லிமிடெட் புதிய இலச்சினையை அறிமுகம்

இலங்கையின் ஹஜ் மற்றும் உம்ரா சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனமான யுனைடெட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடேஸ் (பிரைவேட்) லிமிடெட் தனது புதிய இலச்சினையை அறிமுகம் செய்துள்ளது.

குறித்த அறிமுக நிகழ்வு கொழும்பில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் ஹஜ் மற்றும் உம்ரா சேவை வழங்குவதில் கடந்த 6 வருடங்களாக தனக்கான ஒருவழியில் யாத்திரியர்களின் அமோக ஆதரவுடன் நாடளாவிய ரீதியில் சேவையை வழங்கும் ஒரே ஒரு நிறுவனம் என்பதில் பெறுமிதம் கொள்கின்றது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இலச்சினை, ஒரு விமானத்தின் ஜன்னல் பகுதி இருப்பதுடன், அது ஆங்கில எழுத்து யூ வடிவத்தையும், அந்த ஜன்னலுகுள் இருந்து பார்க்கும் போது விமானத்தின் பின் பகுதி போன்ற வடிவமைப்பு ஆங்கில எழுத்து “டி” வடிவத்தை கொண்டுள்ளது. இலச்சினையின் தோற்றத்தில் பல வர்ணங்கள் அடங்கியுள்ளன.

அந்த நிறங்கள் ஒற்றுமை, அரவணைப்பு, அன்பு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை வௌிப்படுத்தி நிற்கின்றது.

யுனைடெட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடேஸ் (பிரைவேட்) லிமிடெட் சர்வதேச தரத்தில் தனது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப, தனது சேவையை வழங்கி வருவதுடன், கடந்த பல வருடங்களாக இலங்கை மக்கள் மத்தியில் ஹஜ் மற்றும் உம்ரா சேவையில் அபிமான நம்பிக்கையை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அறிமுக நிகழ்வில், நிறுவனத்தின் ஊடாக சேவையை பெற்றவர்களுக்கான நினைவு சின்னங்கள் வழங்கிவைத்து கௌரவித்தமை நிறுவனத்தின் தரம், தனித்துவம் சிறப்பு மற்றும் புத்தாக்கத்தையும் எடுத்து காட்டுகின்றது.

பொருளாதார சிக்கலின் பின்னர் நாட்டில் உம்ரா கட்டணம் விண்னை முட்டும் அளவிற்கு உயர்ந்திருந்த வேளையில் அனைவருக்கும் உம்ரா எனும் தொனிப்பொருளில் கடந்த ஒக்டோபர் மாதம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனும் சாதாரண கட்டணத்தில் அறிமுகம் செய்து உம்ரா துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தியது.

 

இலங்கையில் தற்போது உம்ரா சேவை துறையில் விலையை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதுடன், சந்தையில் விலையை நிர்ணயிக்கும் சக்தியாக இந்நிறுவனம் திகழ்கின்றது.

எதிர்காலத்தில் ஹஜ் கடமையை நிறைவேற்ற உள்ளவர்களுக்கான பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட புதிய ஒரு பேகேஜை அறிமுகம் செய்யவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானின் IRIS Bushehr கப்பலை திருகோணமலைக்கு அனுப்ப நடவடிக்கை

ஈரானுக்குச் சொந்தமான 'IRIS Bushehr' கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு...

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் – இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம்...

Breaking நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை

புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா மின் விநியோகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு...