Date:

நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் காலமானார்

தமிழ்நாட்டின் தே.மு.தி.க கட்சியின் தலைவர் விஜயகாந்த் காலமானாதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மியாட் மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜயகாந்த் அதன்பிறகு அவர் தேமுதிக கட்சியை ஆரம்பித்து அரசியலில் நுழைந்தார்.

அதன்பிறகு நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கி அறிக்கை வாயிலாக மட்டுமே அரசியல் செய்து வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஆஸ்திரியாவில் அவசரமாக தரையிறக்கிய இலங்கை விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்...

பரீட்சை மாணவர்களுக்கு விண்ணப்பிக்காத பாடம் வந்ததால் சிக்கல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாம் முறை விண்ணப்பித்த...

காஸா சிறுவர் நிதியம் – மாவனல்லை சாஹிரா கல்லூரி 33 இலட்சம் ரூபா அன்பளிப்பு

காசா சிறுவர் நிதியத்திற்கு மாவனல்லை சாஹிரா கல்லூரி 33 இலட்சம் ரூபாவை...

சவூதி அரேபிய தூதுவரை சந்தித்தார் ஆளுநர் நசீர் அஹமட்

      வடமேற்கு மாகாண ஆளுநர் நசீர் அஹமட் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்...