Date:

பெரிய வெங்காய விலை தொடர்பில் வெளியான புதிய தகவல்

நாட்டில் ஏற்பட்டுள்ள பெரிய வெங்காய தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில், பாகிஸ்தான், சீனா, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, முதற்கட்டமாக பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என இறக்குமதியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமை, 380 ரூபாவிற்கு மொத்த வியாபாரிகள் விற்பனை செய்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

350 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயமே, இவ்வாறு 380 ரூபாவிற்கு மொத்த வியாபாரிகளுக்கு வழங்கப்படுகிறது.

பெரிய வெங்காயத்தின் சில்லறை விலையாக 405 ரூபா முதல் 420 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலிருந்து இந்த வாரம் பெருமளவு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டவுள்ளதுடன், அடுத்த மாதம் சீனா மற்றும் நெதர்லாந்திலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இதையடுத்து, பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறைவடையும் என பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“அவனை கொன்று விட்டேன். அவனால் இனி வர முடியாது” நடந்தது என்ன?

குளியாபிட்டிய பிரதேசத்தில் காதலியின் வீட்டுக்குச் சென்ற 36 வயதான சுசித ஜயவன்ச...

மட்டக்களப்பு வின்சன் பாடசாலையின் பழைய மாணவி ஐக்கிய இராச்சியத்தில் சாதனை!

இலங்கை - மட்டக்களப்பு வின்சன் பாடசாலையின் பழைய மாணவியான பூஜா உமாசங்கர்...

மைத்திரி வழங்கிய இரகசிய வாக்குமூலம் வெளியானது

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கிய இரகசிய...

புதிய விசா நடைமுறை அறிமுகம்

ஈ - விசா பெற்றுக் கொள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் ...