Date:

ஒரு பெண்ணுக்காக நடந்த கலவரம்!

மில்லனியவின், பெல்லந்துடாவ பகுதியில் யுவதி ஒருவர் தொடர்பில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மில்லனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மில்லனிய, பெல்லந்துடாவ, தம்மானந்த மாவத்தையில் கடை ஒன்றுக்கு முன்பாக வைத்து வாள்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் மூவர் பெல்லந்துடாவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் மற்றைய நபர் பொக்குனுவிட்ட பிரதேசத்தை சேர்ந்தவர்.

பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எப்போது தேர்தல் என்று இப்போது கூற முடியாது! அமைச்சர் அறிவிப்பு

மாகாணசபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை உறுதியாகக் கூற முடியாது, தேர்தல்...

’முழு நாடும் ஒன்றாக’: 1,314 பேர்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314...

பாதுகாப்பு கோருகிறார் அம்பிட்டியே தேரர்

தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, மட்டக்களப்பு மங்களராமயத்தின் விகாராதிபதி...

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...