தனியார் துறையினரால் கீரி சம்பா அரிசிக்கு பதிலாக 50,000 மெற்றிக் தொன் Gr 11 அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்த உணவுக் கொள்கைக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசியின் விலையில் போட்டித் தன்மையை ஏற்படுத்தி, நுகர்வோருக்கு விலை அனுகூலத்தை வழங்கும் நோக்கில் இந்த அரிசியின் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.