முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டங்களை எவருடைய அழுத்தம் வந்தாலும் தான் கை விட தயாராக இல்லை என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் சில இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் சில சட்டதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், முஸ்லிம் விவாகரத்து சட்டத்தில் மட்டும் அல்லாது கண்டி சட்டத்தையும் மாற்றத்திற்கு உட்படுத்தியுள்ளோம் அந்த சட்டத்தில் 16 வயது தொடக்கம் 18 வயதிற்கு இடைப்பட்டவர்கள் பெற்றோர் அனுமதியுடன் திருமணம் முடிக்கமுடியும் என உள்ளது அதையும் மாற்றுவதற்கான நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முஸ்லிம் விவாக சட்டத்தில் பெண் ஒருவர் திருமணம் முடிக்கின்ற போது அவர் கை ஒப்பம் வைப்பதில்லை அவ்வாறான விடயங்கள் கட்டயம் மாற்றத்திற்கு உட்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமான முஸ்லிம் விவாகரத்து சட்டங்களை கையாழும் காதி நீதிமன்றங்கள் இல்லாமல் செய்யப்பட்டு பொது நீதி மன்றங்களில் குறித்த பிரச்சிணைகளை கையாளவேண்டும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
எதிர்காலத்தில் பலதார திருமணம் செய்துகொள்ள முடியுமா? இல்லையா என்பது தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.