Date:

சர்வதேச விருதுடன் சூர்யா – ஜோதிகா

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ‘சூரரைப் போற்று’. கடந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ஓடிடியில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளையும் வென்று வருகிறது.

அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படத்துக்கு, சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரு விருதுகளை வென்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விருது விழா ஆன்லைனில் நடத்தப்பட்டது. இந்நிலையில், மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படம் வென்ற விருது தற்போது சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த விருது நடிகர் சூர்யா கைவசம் கிடைத்தபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இது சூரரைப் போற்று படக்குழுவினரின் கடின உழைப்புக்கு கிடைத்த விருது என நடிகர் சூர்யா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

கட்டார் கடலோரப் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது இனந்தெரியாத தாக்குதல்...

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்...

கிளிநொச்சி மண்ணின் வரலாற்றுச் சாதனை

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கணிதப் பிரிவில் 2.9400 Z-Score...