2023 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு இன்று (03) அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவா்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவா்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
2023 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்புகள் நேற்று (2) தொடங்கின.
அதன்படி நேற்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று(அக். 3) இயற்பியல் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் Pierre Agostini, ஜெர்மனியின் Ferenc Krausz, ஸ்வீடனின் Anne L’Huillier ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளில் உள்ள எலக்ட்ரான்களின் இயக்கம் குறித்து இவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
அணுக்களுக்குள் வேகமான செயல்பாடுகளை அவதானிக்க, மிக விரைவாக ஒளியை வெடிக்கச் செய்வதற்கான வழியை அவர்கள் கண்டுபிடித்தனர்.
இம்மூவருக்கும் £824,000 பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW