சம்பந்தப்பட்ட தரப்பினருடன் எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளாமல் இலங்கை அரசாங்கம் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு மேற்கொள்ளும் முயற்சி தொடர்பில் தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆசிய இன்டர்நெட் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு ஆசிய பிராந்தியத்தில் இணையத்தள சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பாகும்.
ஆசிய இன்டர்நெட் கூட்டமைப்பில் Google, Meta (Facebook, Instagram, WhatsApp, Threads), Amazon, Apple, Booking.com, Expedia Group, Goto, Grab, Line, LinkedIn, Rakuten, Spotify, Snap, Shopify, X (Twitter) மற்றும் Yahoo ஆகிய நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன.
உத்தேச சட்டமூலம், இலங்கையர்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் எதிர்ப்பை வௌிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை தடுக்கும் கொடூரமான சட்டமாகும் என அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW