களுபோவில வைத்தியசாலையில் குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கான பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விசேட அதிகாரியொருவர் களுபோவில வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஜீ.விஜேசூரிய குறிப்பிட்டார்.
குறித்த இரட்டை குழந்தைகளின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதால், அது தொடர்பில் பெற்றோரால் வைத்தியசாலை பணிப்பாளரிடம் விசாரணைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
சிசுக்களின் மரணம் தொடர்பில் கஸ்பேவ பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW