முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் இறக்குமதி மூலம் இலங்கைக்குள் நிபா வைரஸ் பரவும் அபாயம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணை குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நிபா வைரஸ் இலங்கைக்குள் பிரவேசிக்கும் அபாயம் மிகவும் குறைவு என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவும் அபாயம் கடந்த மூன்று வருடங்களில் பல தடவைகள் முன்னிலைப்படுத்தப்பட்ட போதிலும் அது இலங்கையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என அவர் கூறுகிறார்.
நிபா வைரஸ் குறித்து மக்கள் தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம் என்றும் அலுத்கே மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW