இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 18,000 மதுபான போத்தல்களை ஏலம் விடுவதற்கு இலங்கை சுங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
வருட தொடக்கத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மதுபான போத்தல்களே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் திரு.சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
அதற்கான ஏலத்தை சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவு நடத்த உள்ளது.
கலால் திணைக்களத்துடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திரு.சிவலி அருக்கொட குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW