Date:

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு இல்லை – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

“ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராகக் களமிறங்கினால் ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுன ஆதரவளிக்காது.”

-இவ்வாறு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு
வழங்கப்படும் என்று எவரும் கூறவில்லை. ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்
கக்கூடிய பல தகுதியான வேட்பாளர்கள் எமது கட்சியில் உள்ளனர். ஆகவே, ரணிலுக்கு ஆதரவளிப்போம் என்று
நாம் ஒருபோதும் கூறவில்லை.
பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவமே எமது
நோக்கமாகும்.” – என்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுவேட்பாளராக ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்கவைக் களமிறக்க வேண்டும்
என்று மொட்டுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் பொது வெளியில் கருத்
துக்களை வெளியிட்டு வருகின்றனர். எனினும், மொட்டுக் கட்சியின் நிறுவு
நர் பஸில் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று
அக்கட்சியின் மற்றுமொரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையிலேயே அக்கட்சியின் முக்கிய உறுப்பினரான ரஞ்சித் பண்டாரமேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியின், பாலிகேசிரி மாகாணத்தில் நேற்று (10) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.1...

பொரளை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய மூவர் கைது

பொரளை, சஹஸ்புர சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு...

இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று...

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு வாகனத்துடன் பறிமுதல்

மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு...