Date:

வரிப் பிரச்சினையை தீர்க்குமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் உழைக்கும் போது செலுத்தும் வரியில் திருத்தங்களை மேற்கொள்ளும் விடயத்தில் தலையிடவுள்ளதாக ‘பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு’ தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அந்தக் குழு தொழிற்சங்கங்களுக்கு தெரிவித்துள்ளது.

வரிப் பிரச்சினையை தீர்ப்பது குறித்து அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் வலியுறுத்தவுள்ளதாகவும் துறைசார் மேற்பார்வைக் குழு தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளது.

வரித்திருத்த நடவடிக்கையின் போது பாதிக்கப்படும் தொழிற்சங்கங்கள் சிலவற்றுடன் கலந்துரையாடுவதற்காக, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியிருந்தது.

வரிப் பிரச்சினைகள் காரணமாக பல்வேறு துறைசார் நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றமையையும் இந்த கலந்துரையாடலின் போது அந்தக் குழு ஏற்றுக்கொண்டது.

இக்கூட்டத்தில் சுமார் 25 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் சுயாதீன கண்காணிப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை அணிக்கு அபார வெற்றி

ஆசிய கிண்ண டி20 தொடரின் குழு B பிரிவில் இன்று (13)...

இலங்கையின் வெற்றி இலக்கு 140 ஓட்டங்களாக நிர்ணயம்..

ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய...

கட்டாருடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியது இலங்கை!

இலங்கை கட்டாருடனான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண்...

பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...