Date:

முச்சக்கரவண்டி விபத்து – படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதி

 

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இன்று (13) மதியம் 12.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ, மோரா தோட்டபகுதியில் இருந்து, ஹட்டனுக்கு சென்றுக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதி, அவரது மனைவி மற்றும் 1 1/2 வயது குழந்தை ஆகியோர் குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர், மேற்படி சாரதிக்கு தலைப்பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு மூன்று பேரும் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...