பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள 84 புகையிரத சாரதிகள் உடனடியாக பணிக்கு சமூகமளிக்குமாறு ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அவ்வாறு அவர்கள் வேலைக்குச் செல்லத் தவறினால், அவர்கள் தங்கள் பதவிகளைத் தாமாகவே இராஜினாமா செய்ததாக கருதப்படுவார்கள் என்பதுடன், மேலும் அதற்கான கடிதங்கள் அனுப்பப்படும் என்றும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW