Date:

1000 தாதியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்

தாதியர் கற்கைநெறியை பூர்த்தி செய்த 1000 தாதியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த ஆட்சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் கெ​ஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

தாதியர் கற்கைநெறியை நிறைவு செய்த இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இதேவேளை, இணை சுகாதார பட்டதாரிகள் குழுவை சுகாதார அமைச்சின் பதவிகளில் உடனடியாக இணைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தாதியர் பயிற்சிக்காக 3500 மாணவர்களை உள்வாங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்காக 2019, 2020 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் சித்தியடைந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை நாளை மறுதினம் (15) முதல் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking: மக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டிருந்த 42 இந்தியர்கள் உயிரிழப்பு!

தெலுங்கானாவில் இருந்து மக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்கள் இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளனர் இந்த...

முன்னாள் பிரதி சபாநாயகர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்

முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று முற்பகல் 9.00 மணியளவில்...

காலிமுகத்திடல் கடலில் மூழ்கி இளைஞன் பலி

கோட்டை காவல் பிரிவின் காலி முகத்திடல் பகுதியில் 6.11.2025 அன்று மாலை,...

புவிச்சரிதவியல் அளவை, சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் கைது

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அநுர வல்போல...