ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டி தற்போது கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
போட்டியில் 357 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 44 ஓட்டங்களையை பெற்றிருந்த நிலையில், போட்டி மீண்டும் மழையால் தடைபட்டுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 356 ஓட்டங்களை எடுத்தது.
நேற்று நடைபெற்ற போட்டிக்கு மழை இடையூறு ஏற்படுத்தியதால், முன்னதாக திட்டமிடப்பட்ட போட்டியை இன்று வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி இன்று மதியம் மழை மீண்டும் குறுக்கிட்டதால் போட்டி மாலை 4.40 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW