ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்று வருகின்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் பெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுபெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 02 விக்கெட்டுக்களை இழந்து 356 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக, விராட் கோலி 122 ஓட்டங்களையும், கே.எல்.ராகுல் 111 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 56 ஓட்டங்களையும், சுப்மன் கில் 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி பெற்ற 47ஆவது சதம் இதுவாகும்.
இதன்படி, விராட் கோலி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 13,000 ஓட்டங்களை கடந்துள்ளார்.
விராட் கோலி 94 பந்துகளில் 09 நான்கு ஓட்டங்கள், 03 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 122 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அத்துடன், கே.எல்.ராகுல் பெற்ற 06ஆவது சதம் இதுவாகும்.
கே.எல்.ராகுல் 106 பந்துகளில் 12 நான்கு ஓட்டங்கள், 02 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக … ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், பாகிஸ்தான் அணியின் ஷஹீன் ஷா அப்ரிடி 79 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், ஷதாப் கான் 71 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 10 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்தநிலையில், பாகிஸ்தான் அணி 357 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட தயாராகவுள்ளது.
இந்த போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமானது.
முதலில் துடுபெடுத்தாடிய இந்திய அணி 24.1 ஓவர்கள் நிறைவில், 2 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழைக்குறுக்கிட்டது.
இதனால், போட்டி இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW