இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் கேரள முதலமைச்சர் பிரனய் விஜயனைச் சந்தித்தார்.
கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற இச்சந்திப்பில் கேரளாவுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா அபிவிருத்திகளை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 1970ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து கேரளாவில் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துவரும் பணிகளுக்கு முதலமைச்சர் பிரனய் விஜயன் வாழ்த்துத் தெரிவித்துள்ளதோடு, இலங்கைக்கு வருகை தருமாறு ஆளுநர் செந்தில் தொண்டமான், விடுத்த அழைப்பை ஏற்று இலங்கை வருவதாகவும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW