Date:

அப்புத்தளை கொலை வழக்கு – பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

அப்புத்தளை கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

அப்புத்தளையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கும் கொலைக்கு பயன்படுத்திய வாகனம் ஒன்றை கைப்பற்றுவதற்கும் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இது குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அப்புத்தளையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதியன்று, வாகனத்தில் வந்த இனந்தெரியாத குழுவினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொரு நபர் படுகாயமடைந்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த இலக்கத் தகடு போலியானது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இது தொடர்பில் பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளதுடன், இது தொடர்பான தகவல்களை தியத்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – 071 859 1531 அல்லது பண்டாரவளை பொலிஸ் – 057 222 2260 /057 223 1612 ஆகிய இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறும் கோரியுள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373