Date:

இராஜின் கன்னத்தில் அறையவில்லை-யோஷித்த

பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன தேசிய இளைஞர் சேவைச் சபையின் பணிப்பாளர் குழுவிலிருந்து நேற்று (25) இராஜினாமா செய்தமைக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும், பிரதமரின் பணிக்குழாம் பிரதானியுமாகிய யோஷித்த ராஜபக்ஷ, இராஜின் கன்னத்திற்கு அறைந்தமையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.

இருப்பினும் இந்த செய்தியை யோஷித்த ராஜபக்ஷ முற்றாக நிராகரித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த யோஷித்த ராஜபக்ஷ, இராஜ் வீரரத்னவுடன் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லையெனவும், அவரை இறுதியாக உற்சவமொன்றில் வைத்து சந்தித்ததாகவும் தெரிவித்தார்.

எனவே, இராஜ் பதவியை இராஜினாமா செய்தமைக்கும் தனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லையென யோஷித்த தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...