Date:

4 தடுப்பூசிகளின் செயற்திறன் தொடர்பான ஆய்வில் வெளிவந்த தகவல்கள்

கொவிட்-19 தடுப்பூசி நூற்றுக்கு நூறு வீதம் செயல்திறன் மிக்கதாக இல்லாவிட்டாலும்கூட, அதனூடாக நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதும், மரணமடைவதும் பெரும்பாலும் தடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கியமான நான்கு தடுப்பூசிகளின் செயற்திறன் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே, தமது ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

50 வயதிற்கு மேற்பட்டவர்களை அவதானிக்கையில், சைனோபாம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களை விடவும், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களிடையே ஏற்படும் மரணம், 8 மடங்கு அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரம், பைஸர், அஸ்ட்ராசெனகா மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட 50 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே இதுவரையில் மரணங்கள் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

50 வயதிற்கு குறைந்த, தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத கொவிட் தொற்றாளர்களின் மரணமானது, சைனோபாம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களை விடவும், 3.8 மடங்கு அதிகமாகும் என்றும் இந்த ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...