Date:

இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும்

நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மின்னல் தாக்கம் மற்றும் தற்காலிகமாக அதிகரித்து வீசும் காற்று என்பனவற்றினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நுகேகொட பேரணிக்கு திலித்திற்கு அழைப்பு

எதிர்க்கட்சிகளின் ஒரு பகுதியினர் இணைந்து எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் நடத்தவுள்ள...

323 கொள்கலன்கள் குறித்து விசாரிக்க பாராளுமன்றத் தெரிவுக்குழு

கட்டாய பௌதீக ஆய்வு இன்றி 323 கொள்கலன்களை விடுவித்தது குறித்து விசாரணை...

இரண்டு மலையக ரயில் சேவைகள் ரத்து

கொழும்பு கோட்டை மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையில் இயக்கப்படும் இரண்டு...

விசேட வைத்தியர்களுக்கான சட்ட வரைவைத் தயாரிக்கக் குழு

விசேட வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்டத்தை வரைவு செய்வதற்காக சுகாதார மற்றும்...