Date:

இந்திய போர் விமானியான முதல் இஸ்லாமிய பெண்

உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் தேஹத் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜசோவர் கிராமத்தில் வசித்து வருகிறார் சானியா மிர்சா என்ற இளம்பெண்.

இவரது தந்தை ஷாகித் அலி ஒரு டி.வி, மெக்கானிக் ஆவார். சிறுவயதில் இருந்தே சாதிக்க வேண்டும் என்ற இலக்கை கொண்டிருந்த சானியா, வளர வளர போர் விமானியாக வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.

அதற்காக முழு ஈடுபாட்டுடன் பள்ளி, கல்லூரி முடித்த இவர் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுக்கு தீவிரமாக படித்தார். தாய் மொழி (இந்தி) கல்வி வழியில் மட்டுமே பயின்ற இவர், தனது கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆரம்ப கல்வி முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்தார்.

12ஆம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். அதன் பிறகு, அவர் நகரில் உள்ள குருநானக் பெண்கள் கல்லூரிக்கு சென்றார். தனது ரோல் மாடலாக இந்தியாவின் முதல் பெண் போர் விமானி அவ்னி சதுர்வேதியை கருதுகிறார்.

இந்திய போர் விமானியான முதல் இஸ்லாமிய பெண்ணின் சாதனை! | The First Muslim Woman An Indian Fighter Pilot

 

தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுக்கு தயாராகி வந்த இவர், அண்மையில் நடைபெற்ற தேர்வில் 149-வது ரேங்க் எடுத்து சாதனை படைத்துள்ளார். தேசிய பாதுகாப்பு அகாடமி 2022 தேர்வில், ஆண் மற்றும் பெண் உட்பட மொத்தம் 400 இடங்கள் இருந்தன. பெண்களுக்கு மொத்தமாக 19 இடங்களும், அதில் போர் விமானி பிரவில் இரண்டு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன.

இந்த இரண்டு இடங்களில், சானியா தனது திறமையின் மூலம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை குறித்து சானியா கூறுகையில், “இந்தி மீடியம் படிக்கும் மாணவர்களும் உறுதியுடன் இருந்தால் வெற்றி பெறலாம். புனே கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி இணையவுள்ளேன். எனது பெற்றோரும், செஞ்சுரியன் டிஃபென்ஸ் அகாடமியும்தான் எனது வெற்றிக்கு முழு காரணம்.

இந்திய போர் விமானியான முதல் இஸ்லாமிய பெண்ணின் சாதனை! | The First Muslim Woman An Indian Fighter Pilot

 

தேசிய பாதுகாப்பு அகாடமி 2022 தேர்வில் போர் விமானிகளில் பெண்களுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் முயற்சியில் என்னால் சீட்டை பெற முடியவில்லை. ஆனால் எனது இரண்டாவது முயற்சியில் எனக்கு இடம் கிடைத்துள்ளது” என்றார்.

மகளின் வெற்றியை குறித்து தாய் கூறுகையில், “எங்கள் மகள் எங்களையும் ஒட்டுமொத்த கிராமத்தையும் பெருமைப்படுத்தியுள்ளார். போர் விமானி ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றியுள்ளார். அவர் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் அவர்களின் கனவுகளைப் பின்பற்றத் தூண்டினார்” என அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“அவனை கொன்று விட்டேன். அவனால் இனி வர முடியாது” நடந்தது என்ன?

குளியாபிட்டிய பிரதேசத்தில் காதலியின் வீட்டுக்குச் சென்ற 36 வயதான சுசித ஜயவன்ச...

மட்டக்களப்பு வின்சன் பாடசாலையின் பழைய மாணவி ஐக்கிய இராச்சியத்தில் சாதனை!

இலங்கை - மட்டக்களப்பு வின்சன் பாடசாலையின் பழைய மாணவியான பூஜா உமாசங்கர்...

மைத்திரி வழங்கிய இரகசிய வாக்குமூலம் வெளியானது

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கிய இரகசிய...

புதிய விசா நடைமுறை அறிமுகம்

ஈ - விசா பெற்றுக் கொள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் ...