Date:

60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதில் விசேட கவனம்

கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் போது, 60 வயதிற்கு மேற்பட்ட மற்றும் தொற்றா நோய்களால் நீண்டகாலம் பீடிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக பதிவாகிய கொவிட் மரணங்களில் பெரும்பாலானவை மேல் மாகாணத்திலேயே சம்பவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் அதிகமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட , தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத மற்றும் தொற்றா நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதனால், 60 வயதிற்கு மேற்பட்ட மற்றும் தொற்றா நோய்களால் நீண்டகாலம் பீடிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, விசேட செயற்றிட்டம் ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் கொவிட்-19 ஒழிப்பு விசேட குழுவுடன் இன்று முற்பகல் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

பிசிஆர் மற்றும் ஆன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது, 60 வயதிற்கு மேற்பட்ட மற்றும் பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

சிறுநீரக அறுவ சிகிச்சை அல்லது குருதி சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப்பட்ட நோயாளர்களை தனிமைப்படுத்தி வைக்க வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...