Date:

தனியார் அரச பஸ் சாரதி, நடத்துனர்களுக்கு இடையில் கைகலப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை பஸ் சாரதி, நடத்துனர் மற்றும் தனியார் பஸ் சாரதி, நடத்துனர் ஆகியோருக்கு இடையில், இன்று (09) காலை கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

 

இன்று காலை 06.20 மணியளவில், கரடிப்போக்கு சந்தியில் வைத்து குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது, இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை பஸ் சாரதி, நடத்துனர் காளமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்  போது பயணிகள் பஸ்களில் இருந்துள்ளனர். எனினும், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இரு தரப்புக்கும் இடையில் நேர அட்டவணை மற்றும் வழி அனுமதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முரண்பாடுகள் நீண்ட காலமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது...

தோல்வி அடைந்த புத்தளம் மாநகர சபையின் முதல் வரவு செலவுத் திட்டம்!

புத்தளம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் இன்று...

நுவரெலியாவுக்கு இரவு நேர பயணம் வேண்டாம்!

நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம்...

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகினி்றது. இன்று (12) நிலவரப்படி,...