பிரமிட் முறை நிதி நிறுவனத்தை நடத்திச் சென்ற இருவர் கைது

பிரமிட் முறை நிதி நிறுவனம் ஒன்றை நடத்துதல், ஊக்குவித்தல்,விளம்பரப்படுத்துதல், நிதியளித்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் தொடர்பாக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவிற்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

 

 

அதன்படி நேற்று (3) நீர் கொழும்பு பகுதியில் வைத்து,இந்தப் பணம் மோசடியுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

 

சந்தேகநபர்கள் 45 மற்றும் 59 வயதுடையவர்கள் என்பதுடன்,திம்பிரிகஸ்கட்டுவ மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

 

 

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

அக்குறணை – குடுகலையில் வர்த்தக நிலையத்தில் தீ

அக்குறணை, குடுகலை பகுதியில் உள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் இன்று (04) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   இத்தீ...

வங்காள விரிகுடா தொடர்பில் நெடுநாள் மீன்பிடி மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு பலத்த காற்று மற்றும் கடற்பரப்பு கொந்தளிப்பாக இருப்பது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்...