அக்குறணை – குடுகலையில் வர்த்தக நிலையத்தில் தீ

அக்குறணை, குடுகலை பகுதியில் உள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் இன்று (04) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

இத்தீ விபத்து காரணமாகப் பிரதான வீதியின் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

எவ்வாறாயினும், தற்போது தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், இச்சம்பவம் தொடர்பாகக் கடுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பிரமிட் முறை நிதி நிறுவனத்தை நடத்திச் சென்ற இருவர் கைது

பிரமிட் முறை நிதி நிறுவனம் ஒன்றை நடத்துதல், ஊக்குவித்தல்,விளம்பரப்படுத்துதல், நிதியளித்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் தொடர்பாக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவிற்குக் கிடைத்த...

வங்காள விரிகுடா தொடர்பில் நெடுநாள் மீன்பிடி மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு பலத்த காற்று மற்றும் கடற்பரப்பு கொந்தளிப்பாக இருப்பது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்...