சம்பத் மனம்பேரி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

அரிசி லொறியைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் அதிகாரியான சம்பத் மனம்பேரி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பின் அறிவிப்பை நவம்பர் 13ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷந்த கொடவெல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

 

 

இதன்போது சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதிவாதியான சம்பத் மனம்பேரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதுடன், ஏனைய பிரதிவாதிகளும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

 

 

 

இதன்போது குறித்த வழக்கின் தீர்ப்பு நவம்பர் 13ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

 

 

 

2009 ஆம் ஆண்டு நாராஹேன்பிட்டி பகுதியில் அரிசி லொறியொன்றைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக சம்பத் மனம்பேரி உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவினர் மீது சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

வங்காள விரிகுடா தொடர்பில் நெடுநாள் மீன்பிடி மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு பலத்த காற்று மற்றும் கடற்பரப்பு கொந்தளிப்பாக இருப்பது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்...

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் நாமலுக்கு பிணை

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம்...